Category Archives: கவிதைகள்

கவிதை: பெண்மை போற்றுவோம் – மு. பாலகுமார்

தத்தி தத்தி நடக்கையிலே… தாயாக வருகிறாள், துள்ளி குதித்து விளையாட… சகோதரியாய் வருகிறாள், தரணி ஆள துடிக்கையிலே… மனைவியாய் வருகிறாள், தள்ளாடும் வயதினிலே… மகளாய் வருகிறாள், ஆதலால் ஆண்களே… ஆற்றுவோம் நம் கடமையை, அது யாதெனில்… போற்றுவோம் பெண்மையை!

கவிதை: காதலி – மகாகவி பாரதியார்

காலைப் பொழுதிலொரு மேடை மிசையே             வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; மூலைக் கடலினை அவ்வான வளையம்             முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்; நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி             நேரங் கழிவதிலும் நினைப் பின்றியே சாலப் பலபல நற் பகற்கனவில்             தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ஆங்கப் பொழுதிலென் பின் புறத்திலே,             ஆள்வந்து நின்றேனது கண் மறைக்கவே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,             பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன். ஓங்கிவரும்… Read More »

கவிதை: க. எண்ணெய் நூறு கிராம் – ஞானக்கூத்தன்

அலசும் பொருட்டு நீரில் எறியும் கூறைப் புடவையைப் போல வானில் கிளையை வீசிய நித்திரை மரங்கள் இருபுறம் அடைத்த சாலையில் நடக்கிறாள். அம்பாசிடரும் வெள்ளை மாருதியும் ஏற்றிக் கொள்ள அஞ்ச – செலவைப் பார்க்க ஆட்டோ அதிகமென்று நகரப் பேருந்தில் ஏறி வருகிறாள். ஒற்றை அரச மரத்தின் இளைய வேனில் பொலியும் கிளைகளில் காக்கைகள் சிறகு கோதிக் கூவாதிருக்கும். சிலபேர் குளிக்க, சிலபேர் பிழிய புரோகிதர் இங்கும் அங்கும் அலைய அழுகை ஓய்ந்த ஆண்களும் பெண்களும் முட்டு… Read More »

கவிதை: ஆகாயத்திற்கு அடுத்த வீடு – மு. மேத்தா

ஒருவருக்கும் தெரியாமல் ரகசியமாய் உன்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும் என்னை இந்தக் கடிதம்! எந்த ஊரில் இருந்தாலென்ன… என் கடிதத்தை நீ தொட்டவுடன் சிலிர்க்கும் எனக்கு! எழுத்துக்களைப் பார்க்கிறாய் நீ இந்த எழுத்துக்களின் வழியே உன்னை எட்டிப் பார்க்கிறேன் நான்!

தாய் – அப்துல் ரகுமான்

அந்தியின் பூ மௌனத்தில் மார்பகத்து பாலாய்ச் சுரக்கிறது தாலாட்டு கண்ணீரால் கழுவப்பட்ட அதன் ஸ்வரங்கள் ஏறுகின்றன பெண்மையின் ஆரோகணத்தில் புதரை மொய்க்கும் மின்மினிகளாய் தேவதைக் கதைகள் அதன் மேல் ‘காயங்களே! தூங்க வாருங்கள்’ என்று அது அழைக்கிறது அழுகின்ற ஆலயங்களையும் பார்வையற்ற ஆயுதங்களையும் அழைக்கிறது கருப்பையின் இதம் கொண்ட அந்தப் பாடலுக்குள் நான் நுழைகிறேன் பத்திரமாய் இருப்பதற்காக.