Category Archives: சிறுகதைகள்

சிறுகதை: இணைப் பறவை – ஆர். சூடாமணி

வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாய்ப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக் கொண்டு அங்கே வந்தாள். “யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா.” “தெரியும்.” “அங்கே வரேளா?” “ம்ஹும்.” “உங்களைப் பார்க்கத்தானே அவா…” “எனக்கு யாரையும் பார்க்கவாணாம்? நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சுடு.” “உங்களைப் பார்க்காம போவாளா?” “ஏதானும் காரணம் சொல்வேன். எனக்கு உடம்பு சரியாயில்லேன்னு சொல்லேன்.” “நம்பவே மாட்டா.” “அப்போ நான்… Read More »

சிறுகதை: ஒரு கவியின் உள் உலகங்கள் – நா. பார்த்தசாரதி

பூங்குன்றத்துக்குத் தந்தி ஆபீஸ் கிடையாது. தந்தி, தபால் எல்லாம் பன்னிரண்டு மைலுக்கு அப்பால் இருந்த பெரிய நகரமான மேலநல்லூரிலிருந்துதான் பட்டுவாடா ஆகவேண்டும். இரயில்வே ஸ்டேஷனும் மேலநல்லூரில்தான். அங்கிருந்து பூங்குன்றத்துக்குப் போக ஒற்றையடிப்பாதை அடர்ந்த காட்டை வகிர்ந்துகொண்டு செல்கிறது. வண்டித் தடம் சுற்று வழியாகப் போகிறது. அதன் மூலமாகப் போனால் மேலும் நாலுமைல் அதிகமாகும். ஒற்றையடிப்பாதையோ, வண்டித் தடமோ, எதுவானாலும் இருட்டியபின் போக்குவரத்துக் கிடையாது. வனவிலங்குகளைப் பற்றிய பயமும் உண்டு. மலையடி வாரத்தில் அடர்ந்த காட்டினிடையே இரண்டு காட்டாறுகளுக்கு… Read More »

சிறுகதை: புயல் – அகிலன்

இளமைத் திமிரும் வயதின் முறுக்கும் கொண்ட ஆயிரம் ஆயிரம் பெண்களுக்குத் திடீரென்று ஒரே சமயத்தில் பேய் பிடித்துக் கொண்டு தலைசுற்றி ஆடத் தொடங்கினால் எப்படி இருக்கும்? பயங்கரமான ஒரு மந்திரவாதியின் இரக்கமற்ற சவுக்கடி தாங்காது அவர்கள் ரத்தம் கக்கி அலறினால் எப்படி இருக்கும்? – உண்மையிலேயே இயற்கைப் பெண்ணுக்குப் பேய்பிடித்து விட்டதா? கடவுள் என்னும் மந்திரவாதி அவளுடைய வெறி கண்டு சீற்றம்கொண்டு அவளை இப்படி அலறித்துடிக்க வைக்கிறானோ? கடலோரமாக இருந்த அந்தக் கிராமம் புயலால் மதயானையின் கையிலகப்பட்ட… Read More »

சிறுகதை: தலைக்குனிவு – நாரண. துரைக்கண்ணன்

“சார், யாரோ ஒரு கிழவர் வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கணுமாம்” என்று தெரிவித்தான் விடுதி வேலையாள். உடன்மாணவர்கள் சிலருடன் ‘செஸ்’ (சதுரங்கம்) ஆடிக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு வேலையாள் வந்து கூறியது காதில் விழவில்லை. அவ்வளவுக்கு ஆட்டத்தில் அவன் கவனம் ஈடுபட்டிருந்தது. வேலையாள் இரண்டாம் தடவை உரத்துக் கூறிய பிறகுதான், சிதம்பரம் தலைநிமிர்ந்து  நோக்கினான். “யார், என்னையா?” “ஆமாம், சார்…” “யார் தேடி வந்திருக்காங்கன்னு  சொன்னாய்?” “யாரோ ஒரு கிழவர்..” “கிழவரா?” “ஏன்? எவளேனும் குமரி யொருத்தி, தேடி வந்திருப்பாளென்று நினைத்தாயா?” என்று… Read More »

சிறுகதை: செவ்வாய் தோஷம் – புதுமைப்பித்தன்

முருக்கம்பட்டிக்கு லோகல்பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால் உளைச்சல், வெட்டுக் காயம் அல்லது வேனல் கட்டி – இவைகளை மட்டிலுமே குணப்படுத்துவதற்கான வசதி அமைந்தது. கிராமவாசிகள் திடமான தேகமுள்ளவர்களானதால்  பட்டணத்துக் காரர்களைப்போல் நாகரிகமான வியாதிகளைப் பெறுவதில்லை. கொய்னா மாத்திரம் மத்திய சர்க்காரின் மலேரியா எதிர்ப்பு முயற்சியால், கிராமவாசிகளிடையே இலவச விநியோகத்திற்காக வேண்டிய மட்டிலும் உண்டு. டாக்டர் வீரபத்திர பிள்ளை எல்.எம்.பி. அந்தப் பிரதேசத்தின் தேக சௌகர்யத்திற்குப் பொறுப்பாளி யல்லரானாலும், கிராமவாசிகள் வருவித்துக் கொள்ளக்… Read More »

சிறுகதை: குறட்டை ஒலி – டாக்டர் மு.வரதராசன்

நாங்கள் மேல் மாடியில் குடியிருந்தோம். கீழே வடபகுதியில் ஒரு குடும்பமும், தென்பகுதியில் ஒரு குடும்பமும் இருந்தன. தென்பகுதியார் வறுமையால் வாடி இளைத்தவர்கள். கணவன், மனைவி, ஆறு குழந்தைகள், ஒரு பாட்டி, ஒரு நாய் என்று பெருகிய குடும்பம் அது. வட பகுதியார் செல்வம் செழித்துக் கொழுத்தவர்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல்  ஏங்குகின்றவர்கள். அவர்களின் கூடத்திலும் அறைகளிலும் நிறையப் படங்கள் உண்டு. ஓர் அலமாரி நிறையக் குழந்தைப் பொம்மைகளும், நாய்ப் பொம்மைகளும் உண்டு. உயிருடன்… Read More »

சிறுகதை: தவம் – அய்க்கண்

திருப்பத்தூரிலிருந்து பஸ்ஸில் காரைக்குடிக்குப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் கோவிலூரிலிருந்தே இருபக்கங்களிலும் கட்சிக் கொடிகளும், தோரணங்களும் வரவேற்பு வளைவுகளும் கோலாகலமாகக் காட்சியளித்தன. பஸ்ஸில் பக்கத்து சீட்டுக்காரரிடம் விசாரித்தேன். அவர் எங்கள் ஊர்க்காரர். வியாபாரக் கொள்முதல் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் போய் வருகிறவர். அதே மாதிரி அடிக்கடி கட்சிக் கூட்டங்களுக்கும் போய் வருகிறவர். “ஸார்! உங்களுக்குத் தெரியாதா…? நம்ம இண்டஸ்ட்ரிஸ் மினிஸ்டர் ராமசாமி தான் இன்னிக்கு காரைக்குடிக்கு விஜயம் செய்கிறார். கோட்டையூரிலே ஒரு தொழிற்சாலைக்கு அஸ்திவாரக் கல் நாட்டுகிறார். அப்புறம்… Read More »

சிறுகதை: கதவு – கி.ராஜநாராயணன்

கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். “எல்லாரும் டிக்கெட்டு  வாங்கிக்கிடுங்க” என்றான் சீனிவாசன். உடனே  “எனக்கொரு டிக்கட், உனக்கொரு டிக்கட்” என்று சத்தம் போட்டார்கள். “எந்த ஊருக்கு வேணும்? ஏய்… இந்த மாதிரி இடிச்சித் தள்ளினா என்ன அர்த்தம்… அப்புறம் நான் விளையாட்டுக்கு வரமாட்டேன்.” “இல்லை, இல்லை,  இடிச்சித் தள்ளலெ.” “சரி எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்?” குழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் “திருநெல்வேலிக்கு” என்று சொன்னான். “திருநெல்வேலிக்கு,… Read More »

சிறுகதை: பிழைப்பு – ரகுநாதன்

ஆபீஸ் வேலை முடிந்ததும் எழுந்து வெளியே வந்தேன். அன்று வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு யோசனை கிடையாது. பீச்சுக்குச் சென்று நல்ல பாம்பு மாதிரி ‘காத்துக் குடித்துவிட்டு’ வரவோ, பழைய புத்தகக் கடையில் பரிவர்த்தனை பண்ணவோ அல்லது மறுநாள் பாட்டுக்கு யாரிடமேனும் ‘அஞ்சு பத்து’ கைமாத்து வாங்கவோ, வரவேண்டிய கதைக்கு முன்பணமாக தவணை அச்சாரம் வாங்கவோ மனசும் இல்லை; வழியும் இல்லை. ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்ற மாதிரி எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு கப் காப்பிதான். ஆனால்,… Read More »

சிறுகதை: செவ்வாழை – பேரறிஞர் அண்ணா

செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப்பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும்கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டு இருக்கிறதா என்று கவனித்துவிட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும்போதும், அவன் கண்கள்… Read More »